முகப்பு
திருநெல்வேலி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி 2ஆவது நாளாக அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி திருநெல்வேலி ஸ்ரீபுரத்தில் உள்ள அஞ்சல் நிலையம் முன்பு அனைத்துக் கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 5 ஏப்ரல் 2018, 8:47 am IST
பகிர்:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி திருநெல்வேலி ஸ்ரீபுரத்தில் உள்ள அஞ்சல் நிலையம் முன்பு அனைத்துக் கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலியில் 2ஆவது நாளாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திமுக கிழக்கு மாவட்டச் செயலர் ஆவுடையப்பன், மத்திய மாவட்டச் செயலர் அப்துல் வகாப் ஆகியோர் தலைமை வகித்தனர். பேரவை உறுப்பினர்கள் ஏ.எல்.எஸ். லட்சுமணன் (திருநெல்வேலி), டி.பி.எம். மைதீன்கான் (பாளையங்கோட்டை), வழக்குரைஞர் சீனிவாசன், காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில பொதுச் செயலர் வானமாமலை, மாவட்ட பொதுச் செயலர் சொக்கலிங்ககுமார்,  மாவட்ட பொருளாளர் ராஜேஷ் முருகன், மதிமுக மாநகர் மாவட்டச் செயலர் நிஜாம், மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலர் பாஸ்கரன், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மாவட்டச் செயலர் உஸ்மான்கான், மாவட்ட பொருளாளர் சுல்தான், மாவட்ட துணைச் செயலர்கள் ஜமால், அஜீஸ், செய்தித் தொடர்பாளர் ஜாபர்,  முஸ்லிம் லீக் மாவட்டச் செயலர் அலி, விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலர் கரிசல் சுரேஷ்,  ஆதித் தமிழர் பேரவை கலைக்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments