திசையன்விளை அருகே விபத்தில் காயமடைந்தவர் சாவு
திசையன்விளை அருகே நிகழந்த விபத்தில் காயமடைந்து, மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் புதன்கிழமை உயிரிழந்தார்.
திசையன்விளை அருகே நிகழந்த விபத்தில் காயமடைந்து, மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் புதன்கிழமை உயிரிழந்தார்.
நான்குனேரி அருகே உள்ள பட்டர்புரத்தை சேர்ந்த 17 பேர் திசையன்விளை அருகில் உள்ள தச்சன்விளை கிராமத்தில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு சென்றுவிட்டு சனிக்கிழமை அதிகாலை வேனில் ஊர் திரும்பினர். திசையன்விளையை அடுத்த வாழைத்தோட்டம் கிராமம் அருகே எதிரே வந்த கார் வேனுடன் நேருக்கு நேர் மோதி வேன் கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்த திருமலை நம்பி (62), அவரது மனைவி சுந்தரம் அம்மாள் (54), மகள் யசோதா (30) பேரன் கிருஷ்னன் (9) ஆகியோரும் காரில் பயணம் செய்த ராஜேஷ் (35), வசந்தராஜன் (30), குழந்தை ஏசு (25) ஆகியோரும் பலத்த காயம டைந்தனர். காயம டைந்த அனைவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் திருமலை நம்பி அங்கு புதன்கிழமை உயிரிழந்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.