மின்வாரிய ஓய்வு பெற்றோர் கூட்டம்
திருநெல்வேலி மாவட்ட மின்வாரிய ஓய்வுபெற்றோர் சங்க 17ஆவது ஆண்டு விழா மற்றும் பொதுக்கூட்டம் திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்ட மின்வாரிய ஓய்வுபெற்றோர் சங்க 17ஆவது ஆண்டு விழா மற்றும் பொதுக்கூட்டம் திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சங்கத் தலைவர் வே.வீரபத்திரன் தலைமை வகித்தார். செயலர் அ.ராமசுவாமி வரவேற்றார். சம்மேளன பொதுச் செயலர் வே.ஜெகநாதன், பொருளாளர் சு.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். 70 வயதுக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் கெளரவிக்கப்பட்டனர்.
புதிய ஓய்வுதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 21 மாத நிலுவைத் தொகையை ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
க.மீ.திருமலைக்குமாரசாமி, டி.ஜி.கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.