முகப்பு
திருநெல்வேலி

அனைத்துத் தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திருநெல்வேலியில் அரசுப் போக்குவரத்துக் கழக அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 23 ஜூலை 2018, 8:07 am IST
பகிர்:

திருநெல்வேலியில் அரசுப் போக்குவரத்துக் கழக அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசு கொண்டு வரும் சாலை பாதுகாப்பு மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி ஆக. 7 ஆம் தேதி அகில இந்திய அளவில் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் இப்போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது குறித்து அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் வண்ணார்பேட்டையில் நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, தொமுச அமைப்புச் செயலர் அ. தர்மன் தலைமை வகித்தார்.  சிஐடியூ மாநிலக் குழு உறுப்பினர் எஸ். பெருமாள்,  ஏஐடியூசி ஆர். ராதாகிருஷ்ணன், தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில்,  ஆக. 7 ஆம் தேதி நடைபெறவுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது;  போராட்டம் குறித்து வாயிற்கூட்டம்,  மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்துவது;  ஆக. 7 ஆம் தேதி காலை 10 மணிக்கு திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் அருகில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments