பாளை.யில் விபத்து: வியாபாரி சாவு
பாளையங்கோட்டையில் சனிக்கிழமை இரவு நிகழ்ந்த விபத்தில் வியாபாரி உயிரிழந்தார்.
பாளையங்கோட்டையில் சனிக்கிழமை இரவு நிகழ்ந்த விபத்தில் வியாபாரி உயிரிழந்தார்.
பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் மங்கம்மாள் சாலையைச் சேர்ந்த ராஜபாண்டி மகன் ராஜா (25). இவர், அதே பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வந்தார். இவர், தனது மோட்டார் சைக்கிளில் பாளையங்கோட்டைக்குச் சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு புறப்பட்டாராம்.
திருநெல்வேலி அரசு சட்டக்கல்லூரி அருகே சென்றபோது, அவ்வழியாக வந்த வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த ராஜா உயிரிழந்தார். இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.