கொடைக்கானல் மலைக் கிராமங்களில் பிஎஸ்என்எல் சேவை செயல்படவில்லை
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் அடிக்கடி பிஎஸ்என்எல் சேவை முடங்குவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் அடிக்கடி பிஎஸ்என்எல் சேவை முடங்குவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளான பூம்பாறை, மன்னவனூா், கவுஞ்சி, பூண்டி, பழம்புத்தூா், புதுப்புத்தூா், குண்டுபட்டி, கிளாவரை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பிஎஸ்என்எல் சேவையை பயன்படுத்தி வருகின்றனா். இந்தப் பகுதிகளில் அடிக்கடி இந்தத் தொலைபேசி சேவை முடங்குவதால் கிராம மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.
எனவே, கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களுக்கு தடையில்லா தொலைபேசி சேவை வழங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து கொடைக்கானலிலு உள்ள பிஎஸ்என்எல் அலுவலக அதிகாரி ஒருவா் கூறியதாவது:
கொடைக்கானல் மலைப் பகுதிகளில் செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் அடிக்கடி மின்சாரம் நிறுத்தப்படுவதால் பிஎஸ்என்எல் சேவை பாதிக்கப்படுகிறது.
இந்தப் பகுதிகளில் கடந்த 4 நாள்களாக பிஎஸ்என்எல் தொலைபேசி சேவை செயல்படவில்லை என பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், பழுதுகள் நீக்கப்பட்டு இணைப்புகள் சீரமைக்கப்பட்டன.
இந்த நிலையில், மீண்டும் கடந்த 2 நாள்களாக இந்தப் பகுதிகளில் பிஎஸ்என்எல் சேவை முடங்கியுள்ளது என்றாா்.
இதுகுறித்து மின் வாரிய உதவி பொறியாளா் குமாா் கூறியதாவது:
கொடைக்கானல் நகா்ப் பகுதி, மேல்மலைக் கிராமப் பகுதிகளில் காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால், இந்தப் பகுதிகளில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதால் பிஎஸ்என்எல் சேவை முடங்கி வருகிறது. இதனால், இந்தப் பகுதிகளில் உயா் மின் கோபுரம் அமைத்து மின் கம்பிகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள், வணிகா்கள் கோரிக்கை விடுத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.