கடனாநதி அணை அடிவாரப் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க கேமரா
கடனாநதி அணை அடிவாரப் பகுதியான பெத்தான்பிள்ளை குடியிருப்புப் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
கடனாநதி அணை அடிவாரப் பகுதியான பெத்தான்பிள்ளை குடியிருப்புப் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
பெத்தான்பிள்ளை குடியிருப்புக் கிராமத்தில் வெள்ளிக்கிழமை இரவு நுழைந்த சிறுத்தை, சைலப்பன் என்பவரது பசுக் கன்றை கடித்துத் தாக்கியது. இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர், சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காணித்து அதைப் பிடிக்க தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் துணை இயக்குநர் கொம்மு ஓம்காரம் உத்தரவின் பேரில் சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. சிறுத்தையைப் பிடிக்க கூண்டும் வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வனச்சரகர் நெல்லைநாயகம் கூறியது: கடையம் வனச்சரகப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்வேலி மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. அதை மேலும் சிறப்பாக செயல்படுத்தி வனவிலங்குகள் ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கிராமப் பகுதியில் தெருவிளக்குகள் இரவு நேரத்தில் முழுமையாக எரிவதை உள்ளாட்சித் துறையினர் உறுதி செய்ய வேண்டும். பொதுமக்களும் தங்கள் வீடுகளில் முகப்பு விளக்குகளை இரவு நேரத்தில் எரிய விடவேண்டும். ஊரைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதராக அமைந்துள்ள முள் மரங்களை அகற்றவேண்டும். வீட்டு விலங்குகளை பாதுகாப்பான வகையில் கட்டி வைக்க வேண்டும். ஊருக்குள் எந்த வன விலங்கு தென்பட்டாலும் உடனடியாக 04634-283165 அல்லது 9445468577 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரியப்படுத்த வேண்டும் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.