முகப்பு
திருநெல்வேலி

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு தணிந்தது

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஞாயிற்றுக்கிழமை குறைந்ததையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

Updated On : 5 நவம்பர் 2018, 7:49 am IST
பகிர்:

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஞாயிற்றுக்கிழமை குறைந்ததையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
குற்றாலம் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை முதல் பெய்த தொடர் மழையின் காரணமாக பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, சனிக்கிழமை நாள் முழுவதும் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீஸார் தடைவிதித்தனர். ஞாயிற்றுக்கிழமை வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால்,  ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரில் கூட்ட நெரிசலின்றி சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments