முகப்பு
திருநெல்வேலி

நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணம்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோயில் மற்றும்  பாளையங்கோட்டை

Updated On : 5 நவம்பர் 2018, 7:48 am IST
பகிர்:

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோயில் மற்றும்  பாளையங்கோட்டை  அருள்மிகு திரிபுராந்தீசுவரர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நிகழாண்டு இத்திருவிழா அக். 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாள்களில் தினமும் சுவாமி, அம்பாள் வீதி உலா, ஆன்மிகச் சொற்பொழிவு ஆகியன நடைபெற்றன. சனிக்கிழமை அம்பாளுக்கு சுவாமி தவசுக் காட்சி அளிக்கும் வைபவம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, திருவிழாவின் முக்கிய நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி- அம்பாள் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
பின்னர், சுவாமி- அம்பாள் பூப்பல்லக்கில் நான்கு ரதவீதிகளில் பட்டணப் பிரவேசம் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவில் ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் விழா வைபவம் நடைபெற்றது. திங்கள், செவ்வாய்க்கிழமைகளிலும் ஊஞ்சல் விழா நடைபெறுகிறது. புதன்கிழமை (நவ.7) இரவில் சுவாமி, அம்பாள் ரிஷிப வாகனத்தில் மறுவீடு பட்டணப் பிரவேச வீதி உலா நடைபெறும்.
திரிபுராந்தீசுவரர் கோயில்: பாளையங்கோட்டை  அருள்மிகு திரிபுராந்தீசுவரர் கோயிலில் ஐப்பசி  திருக்கல்யாண திருவிழா கடந்த 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, கோயிலில் தினமும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.  சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் மலர் அலங்காரத்துடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.  சிகர நிகழ்வாக திருகல்யாண வைபவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகளும், பாளையங்கோட்டை திருச்சிற்றம்பல வழிபாட்டு அறக்கட்டளையினரும் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments