கங்கை கொண்டான் 4 வழிச் சாலையில் விபத்தை தடுக்க எச்சரிக்கை விளக்கு
திருநெல்வேலி அருகே நான்குவழிச் சாலையில் புதிய எச்சரிக்கை விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி அருகே நான்குவழிச் சாலையில் புதிய எச்சரிக்கை விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி அருகே உள்ள கங்கைகொண்டான் நான்குவழிச் சாலையில் அடிக்கடி விபத்துகள் நேரிடுகின்றன. இதனால் அப்பகுதியில் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை செய்ய சிவப்பு சமிக்ஞை விளக்கு அமைக்கும் பணி நிறைவுற்று தயார் நிலையில் இருந்தது. இந்த எச்சரிக்கை விளக்கு செயல்பாட்டுக்குக் கொண்டுவரும் நிகழ்ச்சி திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் சக்தி குமார் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கங்கைகொண்டான் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் காளியப்பன் எச்சரிக்கை விளக்கின் செயல்பாட்டை இயக்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியின்போது கூடுதல் காவல் கண்காணிப்பாளர் உதயகுமார், துணை காவல் கண்காணிப்பாளர் பொன்னரசு ஆகியோர் உடனிருந்தனர். தொலைவில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் இந்த சிவப்பு சமிக்ஞை விளக்கைப் பார்த்து வாகனத்தை எச்சரிக்கையுடன் ஓட்டுவர். இதனால் விபத்துகள் பெருமளவு தவிர்க்கப்படும். பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் இந்த முயற்சியை வரவேற்றுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.