வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் துத்திகுளம்-வீ.கே.புதூர் சாலை
துத்திகுளம் - வீ.கே. புதூர் இடையே மிகவும் பழுதடைந்து காணப்படும் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
துத்திகுளம் - வீ.கே. புதூர் இடையே மிகவும் பழுதடைந்து காணப்படும் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆலங்குளம் அருகேயுள்ள துத்திகுளம் மற்றும் சிவலிங்க புரம் கிராமங்களில் சுமார் 3 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இங்கிருந்து 2.5 கி.மீ. தொலைவுள்ள வீ.கே. புதூருக்கு சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்பு சாலை அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இச்சாலையின் இரு புறமும் வயல் வெளிகள் உள்ளதால் அதிக அளவில் விவசாயிகளும், வீ.கே. புதூர் ஐ.டி மற்றும் சுரண்டை அரசுக் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்களும் பயன்படுத்தி வருகின்றனர்.
இச்சாலை இதுவரை சீரமைக்கப்படாத நிலையில், குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்துள்ளதுடன், சுமார் 7 கி.மீ. கூடுதலாக சுற்றி கல்லூத்து சாலையை பயன்படுத்தும் நிலை உள்ளது. வெளியூர் செல்ல கூடுதல் நேரம் ஆவதுடன் செலவும் அதிகமாகிறது என மக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
எனவே, மாணவ- மாணவிகள், தொழிலாளர்கள் நலன்கருதி இந்தச் சாலையை மாணவர்கள் உடனடியாகச் சீரைமக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.