முகப்பு
திருநெல்வேலி

இந்தியன் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

இந்தியன் வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் திருநெல்வேலியில் உள்ள மண்டல அலுவலகம் முன்பு புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 24 ஜனவரி 2019, 2:49 am IST
பகிர்:

இந்தியன் வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் திருநெல்வேலியில் உள்ள மண்டல அலுவலகம் முன்பு புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தியன் வங்கி ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வங்கி நிர்வாகத்திடம் அளிக்கப்பட்டுள்ளன. அவற்றை பரிசீலித்து நடவடிக்கை எடுக்காத நிலையில் பிப்ரவரி 15 ஆம் தேதி வேலைநிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி வேலைநிறுத்த விளக்க ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தியன் வங்கி ஊழியர்கள் சங்கத்தின் நிர்வாகி பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.
திருநெல்வேலி-தூத்துக்குடி மாவட்ட வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலர் சண்முகசுந்தரம், விக்டர் துரைராஜ் ஆகியோர்  பேசினர்.  அமைப்புச் செயலர் பொன்னுதுரை நன்றி கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.