திருவனந்தபுரத்தில் இன்று நூல் வெளியீட்டு விழா
பி.எஸ். நடராஜ பிள்ளையும் திருவிதாங்கூர் அரசியலும்' என்ற நூலை திருவனந்தபுரம் சைவப்பிரகாச சபையில் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் கே.பிச்சுமணி ஞாயிற்றுக்கிழமை
பி.எஸ். நடராஜ பிள்ளையும் திருவிதாங்கூர் அரசியலும்' என்ற நூலை திருவனந்தபுரம் சைவப்பிரகாச சபையில் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் கே.பிச்சுமணி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு வெளியிடுகிறார்.
இது தொடர்பாக மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் சந்தோஷ் பாபு வெளியிட்ட செய்திக் குறிப்பு: சைவப்பிரகாச சபையின் நிறுவனரான மனோன்மணீயம் சுந்தரனாரின் புதல்வர் பி. எஸ். நடராஜ பிள்ளையின் வாழ்க்கை சரிதை நூல் வெளியீட்டு விழா, திருவனந்தபுரம் கிள்ளிப் பாலத்துக்கு அருகிலுள்ள சைவப்பிரகாச சபையின் சமூக கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கு சைவப்பிரகாச சபையின் தலைவர் கே. ரவீந்திரன் தலைமை வ கிக்கிறார். செயலர் எஸ் .டி .அரசு வரவேற்கிறார். மனோன்மணீயம் சுந்தரனாரின் கொள்ளுப் பேரன் எஸ்.மோதிலால் நேரு எழுதியுள்ள பி.எஸ். நடராஜ பிள்ளையும் திருவிதாங்கூர் அரசியலும்' என்கிற நூலை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் கே.பிச்சுமணி வெளியிட, கேரள பல்கலைக்கழக துணைவேந்தர் வி.பி.மகாதேவன் பிள்ளை பெற்றுக்கொள்கிறார்.
கேரள மாநில முன்னாள் அமைச்சர்களான திரு கே. சங்கரநாராயண பிள்ளை, கே.சுரேந்திரன் பிள்ளை, சைவப்பிரகாச சபையின் துணைத் தலைவர் கே.குற்றாலம் , அரவிந்தர் அமைப்பு செயற்குழு உறுப்பினர் ஏ.எம்.பெருமாள் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள். எம் .எஸ். பத்மநாபன் நன்றி கூறுகிறார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.