சிதம்பரபுரம் ஆனித் தேரோட்ட விழா கொடியேற்றம்
களக்காடு அருகேயுள்ள சிதம்பரபுரம் நாராயணசாமி கோயில் ஆனித் தேரோட்ட விழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
களக்காடு அருகேயுள்ள சிதம்பரபுரம் நாராயணசாமி கோயில் ஆனித் தேரோட்ட விழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனித் தேரோட்ட விழா 12 நாள்கள் வெகு விமரிசையாக நடைபெறும். நிகழாண்டு இவ்விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை அய்யா நாராயணசாமிக்கு விஷேச பூஜைகள் நடைபெற்று, கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
விழா நாள்களில் நாராயணசாமி காலை, மாலை பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருவாா். 8ஆம் திருநாளான ஜூலை 1ஆம்தேதி வெள்ளிக்கிழமை மாலை பரிவேட்டை நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகிழ்ச்சியான தேரோட்டம் ஜூலை 4ஆம் தேதி நடைபெறுகிறது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.