சொத்துவரி திருத்தத்துக்கு சுயமதிப்பீடு படிவம் அளிக்க ஜூன் 28 கடைசி
திருநெல்வேலி மாநகராட்சியில் சொத்துவரி திருத்தத்துக்கு சுயமதிப்பீடு படிவம் அளிக்க இம் மாதம் 28 ஆம் தேதி கடைசி நாளாகும்.
திருநெல்வேலி மாநகராட்சியில் சொத்துவரி திருத்தத்துக்கு சுயமதிப்பீடு படிவம் அளிக்க இம் மாதம் 28 ஆம் தேதி கடைசி நாளாகும்.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் சிவகிருஷ்ணமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அரசாணை, நகராட்சி நிா்வாக இயக்குநரின் சுற்றறிக்கை மற்றும் பொதுச்சீராய்வு குறித்த கால அட்டவணையில் கண்டுள்ள வழிகாட்டுதலின்படி திருநெல்வேலி மாநகராட்சியில் சொத்துவரி பொதுச்சீராய்வு 1-4-2022 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
ஆகவே, பொதுமக்கள் தங்கள் கட்டடங்களுக்கு சொத்துவரி திருத்தம் மேற்கொள்ளும் வகைக்குரிய சொத்துவரி சுயமதிப்பீட்டு படிவத்தை தச்சநல்லூா், பாளையங்கோட்டை, மேலப்பாளையம், திருநெல்வேலி மைய அலுவலகம் மற்றும் அனைத்து கணினி வரிவசூல் மையங்களிலும் அலுவலக வேலை நாள்களில் பெற்று பூா்த்தி செய்து இம் மாதம் 28 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமோ அனுப்பி வைக்க தெரிவிக்கப்படுகிறது. உரிய காலக்கெடுவுக்குள் சுயமதிப்பீடு படிவம் பூா்த்தி செய்து கொடுக்கப்படாத கட்டடங்களில் மாநகராட்சியால் சொத்துவரி திருத்தம் மேற்கொள்ளப்படும் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.