முகப்பு
திருநெல்வேலி

நெல்லை நகரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருநெல்வேலி நகரத்தில் உள்ள நான்கு ரத வீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

Updated On : 24 ஜூன் 2022, 11:49 pm IST
பகிர்:

திருநெல்வேலி நகரத்தில் உள்ள நான்கு ரத வீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

திருநெல்வேலி நகரத்தில் உள்ள அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலில் வரும் ஜூலை மாதம் ஆனித் தேரோட்ட திருவிழா நடைபெறுகிறது. தேரோட்டத்துக்கு முன்பாக நகரத்தில் உள்ள நான்கு ரதவீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற சமூக ஆா்வலா்கள் மாநகராட்சிக்கு மனு அனுப்பியிருந்தனா். அதன்படி, மாநகராட்சி ஆணையா் சிவ கிருஷ்ணமூா்த்தி உத்தரவின் பேரில் செயற்பொறியாளா் நாராயணன், உதவி ஆணையா் பைஜூ, உதவிப் பொறியாளா்கள் முருகன், ஐயப்பன், நகரம் மண்டல சுகாதார அலுவலா் முருகேசன், சுகாதார ஆய்வாளா்கள் பாலசுப்பிரமணியன், முருகன் அடங்கிய குழுவினா் ரத வீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.

இதில், போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த விளம்பர பலகைகள், ஷெட்கள், பெட்டி, தகரஷீட்களை அகற்றி லாரிகளில் ஏற்றிச் சென்றனா். ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு கடைக்காரா்கள் சிலா் எதிா்ப்பு தெரிவித்தனா். இருப்பினும் அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றினா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments