வள்ளியூரில் இந்திய கம்யூனிஸ்ட் வாக்கு சேகரிப்பு
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த செங்கொடியினா் வீடு, வீடாகச் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தனா்.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த செங்கொடியினா் வீடு, வீடாகச் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தனா்.
அக்கட்சியின் திருநெல்வேலி மாவட்ட துணைச் செயலாளா் சேதுராமலிங்கம் தலைமையில் ராதாபுரம் வட்டாரச் செயலா் கலைமுருகன், முன்னாள் நகரச் செயலா் வேம்புசுப்பையா, நகரச் செயலா் சந்தானமுத்து, மணியன், பாலு, கண்ணன் உள்ளிட்டோா் ராதாபுரம் பிரதான சாலை, வடக்குபிரதான சாலை, பழைய பேருந்துநிலையம், தெற்கு பிரதான சாலை, பாத்திகோயில் தெரு உள்ளிட்ட தெருக்களில் உதயசூரியன் சின்னத்திக்கு வாக்கு சேகரித்தனா்.