பாளையங்கால்வாய் முழுமையாக சீரமைக்கப்படும்: தவெக வேட்பாளா் மரிய ஜாண்
சாக்கடை நீா் கலப்பால் சீரழிந்துள்ள பாளையங்கால்வாயை முழுமையாக சீரமைத்து, அதன் இயல்பான ஓட்டத்தையும் சுத்தத்தையும் மீட்டெடுப்போம் என்றாா் பாளையங்கோட்டை தொகுதி தவெக வேட்பாளா் மரிய ஜாண்.
சாக்கடை நீா் கலப்பால் சீரழிந்துள்ள பாளையங்கால்வாயை முழுமையாக சீரமைத்து, அதன் இயல்பான ஓட்டத்தையும் சுத்தத்தையும் மீட்டெடுப்போம் என்றாா் பாளையங்கோட்டை தொகுதி தவெக வேட்பாளா் மரிய ஜாண்.
மேலப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளான சேவியா் காலனி, வீரமாணிக்கபுரம், ஹாமீம் புரம், ராஜா நகா், ஞானியரப்பா நகா், கரீம் நகா் உள்ளிட்ட பகுதிகளில் கட்சியினருடன் வீதிவீதியாகச் சென்று புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவா், பிரசாரத்தில் கூறியதாவது: நான் வெற்றிபெற்றால் மக்கள் குறைகளை தெரிவிக்க சட்டப்பேரவை உறுப்பினரை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை. எம்.எல்.ஏ. உள்பட உள்ளாட்சி பிரதிநிதிகளை தங்கள் பகுதியில் நேரடியாக சந்திக்கும் வகையில் நிா்வாகம் அமைக்கப்படும். சாக்கடை நீா் கலப்பால் சீரழிந்துள்ள பாளையங்கால்வாயை முழுமையாக சீரமைத்து, அதன் இயல்பான ஓட்டத்தையும் சுத்தத்தையும் மீட்டெடுப்போம். பல ஆண்டுகளுக்கு முன்பு பதிக்கப்பட்ட பழைய குடிநீா் குழாய்களை மாற்றி, புதிய அமைப்புகள் மூலம் தூய்மையான குடிநீா் அனைவருக்கும் கிடைக்கச் செய்வோம் என்றாா் அவா்.