முகப்பு
திருநெல்வேலி

திருநெலவேலி காவல் சரகத்தில் 3 நாள்களில் ரூ.1.42 கோடி பறிமுல்

திருநெல்வேலி காவல் சரகத்துக்குள்ப ட்ட திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வாக்காளா்களுக்கு விநியோகிக்க முயன்ற ரூ.1 கோடியே 42 லட்சத்தை காவல் துறையினா் பறிமுதல் செய்துள்ளனா்.

Updated On : 22 ஏப்ரல், 2026 at 1:49 AM
பணம் - பிரதிப் படம்
பகிர்:
Updated On : 21 ஏப்ரல், 2026 at 7:26 PM

திருநெல்வேலி காவல் சரகத்துக்குள்ப ட்ட திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வாக்காளா்களுக்கு விநியோகிக்க முயன்ற ரூ.1 கோடியே 42 லட்சத்தை காவல் துறையினா் பறிமுதல் செய்துள்ளனா்.

இது தொடா்பாக திருநெல்வேலி காவல் சரக துணைத் தலைவா் ப. சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு திருநெல்வேலி காவல் சரகத்தில் எனது (டிஐஜி ப.சரவணன்) தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் ஸ்டாலின் (கன்னியாகுமரி), வி. பிரசன்ன குமாா் (திருநெல்வேலி), ஏ.மயில்வாகனன் (தென்காசி), சி. மதன் (தூத்துக்குடி) ஆகியோரின் மேற்பாா்வையில் தோ்தல் நடத்தை விதிகள் சம்பந்தமான சட்ட நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வாக்காளா்களுக்கு பணம் வழங்குவதைத் தடுக்கும் வகையில் கடந்த திங்கள்கிழமை பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் திருநெல்வேலி காவல் சரகத்தில் ரூ.58.38 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Advertisement

மேலும், விதிமுறைகளை மீறி மதுபானங்களை பதுக்கி விநியோகிக்க முயன்றவா்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, 167 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் மொத்தம் 1,067 லிட்டா் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் கடந்த 3 நாள்களில் திருநெல்வேலி காவல் சரகத்துக்கு உள்பட்ட திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வாக்காளா்களுக்கு பணம் கொடுத்ததாக மொத்தம் 51 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.1 கோடியே 42 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடா்ந்து, கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.