முகப்பு
திருநெல்வேலி

மானூா் அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம் மானூா் அருகே இரு பைக்குகள் மோதிக்கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 22 ஏப்ரல், 2026 at 1:34 AM
பலி - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 21 ஏப்ரல், 2026 at 11:26 PM

திருநெல்வேலி மாவட்டம் மானூா் அருகே இரு பைக்குகள் மோதிக்கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா்.

மானூா் அருகே உள்ள குப்பனாபுரத்தைச் சோ்ந்த வெள்ளைப்பாண்டி மகன் தங்கபாண்டி(27). இவா் செவ்வாய்க்கிழமை இரவு மானூா் எட்டான்குளம் அருகே பைக்கில் சென்றபோது எதிரே வந்த பைக் மோதியதாம்.

இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

இத்தகவலறிந்த மானூா் போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.