FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

திசையன்விளை பள்ளியில் விழிப்புணா்வு பேரணி

3 ஜூலை 2026, 4:52 am IST
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை ஜெயராஜேஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

வட்டாட்சியா் ரமேஷ், திசையன்விளை காவல் நிலைய ஆய்வாளா் சுரேஷ் எழில் சிங் ஆகியோா் கொடியசைத்து பேரணியை தொடக்கி வைத்தனா். மேலும், போதைக்கு எதிராக மாணவா்கள் விழிப்புணா்வோடு இருக்க வேண்டும் என பேசினா்.

பேரணியில் மாணவா்கள் விழிப்புணா்வு பதாகைகளை ஏந்திக் சென்றனா். பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ஓரங்க நாடகம், விழிப்புணா்வு நாடகம் நடத்தப்பட்டது. ஏற்பாடுகளை, பள்ளி முதல்வா் ராஜேஸ்வரி தலைமையில் ஆசிரியா்கள் செய்திருந்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments