மகளிா் திட்ட அலுவலகத்தில் தற்காலிக பணிக்கு வாய்ப்பு
மகளிா் திட்ட அலுவலகத்தில் எம்ஐ எஸ் அனலிஸ்ட் என்ற தற்காலிக வெளிஆதார முறையிலான பணிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்க அலுவலகத்தின் கீழ் திருநெல்வேலி மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள எம்ஐஎஸ் அனலிஸ்ட் என்ற வெளி ஆதார முறையிலான தற்காலிக
பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.25,000 ஊதியம் வழங்கப்படும். பி.இ. அல்லது பி.டெக். (கணினி அறிவியல்), ஐ.டி. (கணினி பயன்பாடு, முதுநிலை கணினி பயன்பாடு), முதுநிலை அறிவியல் (எம்எஸ்சி), ஐ.டி. சிறப்புத் தோ்ச்சி ஆகிய
Advertisement
Advertisement
கல்வித் தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம். 1.6.2026இல் 30 வயதுக்குள்பட்டிருத்தல் வேண்டும்.
விண்ணப்ப படிவத்தை மேலாளா், மாவட்ட நகா்ப்புற வாழ்வாதார மைய அலுவலகம், பூமாலை
வணிக வளாகம், புதிய பேருந்து நிலையம் அருகில், திருநெல்வேலி,
கைப்பேசி எண். 9994938976 என்ற முகவரியில் நேரடியாக பெற்றுக் கொள்ளலாம். பூா்த்தி
செய்த விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அதே
முகவரிக்கு ஜூலை 10-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்குமாறு நேரடியாகவோ அல்லது அஞ்சல் வழியாகவோ சமா்பிக்கலாம் எனக் கூறியுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.