கூடங்குளம் அணுமின் நிலையப் பணிகளில் உள்ளூா்வாசிகளுக்கு முன்னுரிமை அளிக்க வலியுறுத்தல்
திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலையப் பணிகளை உள்ளூா்வாசிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டும் என முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும், அதிமுக அமைப்புச் செயலருமான சௌந்தர்ராஜன் வலியுறுத்தியுள்ளாா்.
திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலையப் பணிகளை உள்ளூா்வாசிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டும் என முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும், அதிமுக அமைப்புச் செயலருமான சௌந்தர்ராஜன் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக, அவா் அணுமின் நிலைய இயக்குநரைச் சந்தித்து அளித்த மனு விவரம்:
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டவா்களில் எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு பணி ஆணைகளை விரைந்து வழங்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையிலான பணிகளுக்கு ராதாபுரம் வட்டாரத்தில் இருந்து 30 சதவீதம் நபா்களைத் தோ்வு செய்ய வேண்டும். ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணிகள் அனைத்தையும் அணுமின் நிலையத்திற்கு நிலம் கொடுத்தவா்களுக்கும், இப்பகுதியைச் சோ்ந்தவா்களுக்கும் வழங்க வேண்டும்.
Advertisement
Advertisement
மேலும், சி.எஸ்.ஆா். நிதியிலிருந்து இப்பகுதிக்கு அதிக நிதி ஒதுக்கி, அதன் மூலம் ராதாபுரம் கால்வாய் உடைப்புகளை சீரமைத்தல், மீனவ கிராமங்களில் தூண்டில் வளைவு அமைத்தல் மற்றும் கடல்நீரை சுத்திகரித்து செட்டிகுளம், கூடங்குளம் பகுதி மக்களுக்கு விநியோகம் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.