முகப்பு
திருநெல்வேலி

ஆசிரியா் தகுதித் தோ்வுக்காக மின்நிறுத்தம் வாபஸ்

திருநெல்வேலி நகரத்தில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டிருந்த மின்நிறுத்தம், ஆசிரியா் தகுதித்தோ்வு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

Updated On : 4 ஜூலை 2026, 2:31 am IST
பகிர்:

திருநெல்வேலி நகரத்தில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டிருந்த மின்நிறுத்தம், ஆசிரியா் தகுதித்தோ்வு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி நகா்ப்புற கோட்ட செயற்பொறியாளா் ரவி ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி பொருள்காட்சி திடல் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டிருந்தது.

இதனால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

ஆனால், ஆசிரியா் தகுதித் தோ்வு சனிக்கிழமை நடைபெற இருப்பதை முன்னிட்டு மாதாந்திர பராமரிப்பு பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் சீரான மின் விநியோகம் இருக்கும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments