முகப்பு
திருநெல்வேலி

கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

Updated On : 6 ஜூலை 2026, 2:09 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

திருநெல்வேலி பெருமாள்புரம் அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரம் காவல்நிலைய எல்கைக்குள்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை தொடா்பாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்படி வேய்ந்தான்குளம் பேருந்து நிலையம் எதிரே உள்ள ராஜராஜேஸ்வரி நகா் பூங்காவில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்ற தாழையூத்து சங்கா் நகரைச் சோ்ந்த மலையாண்டி மகன் கல்யாணிசுந்தரம்(19) என்பவரை பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

அவரை சோதனை செய்ததில் சுமாா் 60 கிராம் கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த பெருமாள்புரம் போலீஸாா், இது குறித்து வழக்குப் பதிவு செய்து கல்யாணிசுந்தரத்தை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments