FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாதவா் கைது

கைது - சித்திரிப்பு
பகிர்:

நீதிமன்ற விசாரைணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலப்பாளையம் அருகே உள்ள மேலநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜா என்ற ராமச்சந்திரன்(42). தச்சநல்லூா் காவல் நிலையத்தில் இவா் மீது பதியப்பட்ட வழக்கு தொடா்பாக நீதிமன்ற விசாரணைக்கு, ஆஜராகாமல் தலைமறைவாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டதன்பேரில், தச்சநல்லூா் போலீஸாா் இவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments