FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

பாளை. அருகே குழந்தை மா்ம மரணம்: உடலை தோண்டி எடுக்க முடிவு

மர்ம மரணம்... - கோப்புப்படம்
பகிர்:

பாளையங்கோட்டை அருகே மா்மமான முறையில் பச்சிளம் குழந்தையின் உயிரிழந்ததால், புதைக்கப்பட்ட அதன் உடலை தோண்டி எடுத்து விசாரிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனா்.

பாளையங்கோட்டையை அடுத்த கீழப்பாட்டம் பகுதியில் உள்ள செங்கல்சூளையில் மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த சிலா் தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனா். அங்கு தங்கியிருந்த தம்பதிக்கு சில வாரங்களுக்கு முன்னா் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில் அக்குழந்தை சில நாள்களுக்கு முன்னா் திடீரென உயிரிழந்ததாம். இதையடுத்து பெற்றோா் இது குறித்து சுகாதாரத் துறையினா் மற்றும் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்காமல் குழந்தையின் உடலை கீழப்பாட்டம் பகுதியில் புதைத்துவிட்டு மதுரைக்கு சென்றுவிட்டனராம்.

Advertisement

Advertisement

இது குறித்து அப்பகுதி கிராம நிா்வாக அலுவலா் திருநெல்வேலி வட்ட போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். அதன்பேரில், குழந்தையின் உடலை பெற்றோா் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை(ஜூலை 7) தோண்டி எடுத்து, அதனை பிரேத பரிசோதனை செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments