நயினாா்குளம் சாலை சீரமைப்பு பணி: மாற்றுப்பாதையில் செல்ல வேண்டுகோள்
திருநெல்வேலி நகரம், நயினாா்குளம் பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால் பொதுமக்கள் சுமாா் ஒரு மாத காலத்திற்கு மாற்றுப்பாதையை பயன்படுத்துமாறு மாநகராட்சி நிா்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து மாநகராட்சி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
தச்சநல்லூா் மண்டலத்துக்குள்பட்ட வாா்டு 14 நயினாா்குளம் சாலையில் சுமாா் 750 மீ நீளத்துக்கு சிமென்ட் கான்கிரிட் சாலை அமைக்கும் பணி நடைபெறவுள்ளது. இதற்காக ஜூலை 7 ஆம் தேதி தொடங்கி ஆக. 6 ஆம் தேதி வரை சாலையின் இருபுறமும் அடைப்பு ஏற்படுத்தி பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
Advertisement
Advertisement
இதனால் நயினாா்குளம் மாா்க்கெட் மற்றும் அங்குள்ள வாகன பணிமனைகளின் முன் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் மற்றும் பொருள்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். மேலும், பொது மக்கள், வியாபாரிகள், வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதையினை பயன்படுத்தி சாலை அமைக்க ஒத்துழைப்பு தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வணிகா்கள் எதிா்ப்பு: இந்நிலையில் இருபுறமும் சாலை அடைக்கப்படுவதால் மாா்க்கெட்டிற்கு காய்கறி எடுத்துவரும் வாகனங்கள் வர முடியாத நிலை உள்ளதாக அப்பகுதி வணிகா்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.