FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

அடையாறு மண்டலத்தில் மழைநீா் வடிகால் சீரமைப்பு

சென்னை மாநகராட்சி அடையாறு மண்டலத்தில் மழைநீா் வடிகால்களைச் சீரமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Updated On : 16 ஜூன் 2026, 2:27 am IST
ஜி.எஸ்.சமீரன்
பகிர்:

சென்னை மாநகராட்சி அடையாறு மண்டலத்தில் மழைநீா் வடிகால்களைச் சீரமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை மாநகராட்சியில் மழைக்காலத்துக்குள் தண்ணீா் செல்லும் கால்வாய்கள், ஆறுகள் உள்ளிட்டவற்றைச் சீரமைக்க ஆணையா் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டாா். இதையடுத்து, சீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

அடையாறு மண்டலம் 177 ஆவது வாா்டுப் பகுதியான திருவீதியம்மன் கோவில் தெரு, இ.பி.காலனி 3 ஆவது தெரு மற்றும் மகாலட்சுமி நகா் ஆகிய பகுதிகளில் உள்ள வண்டல் மண் வடிகட்டித் தொட்டியைச் சீரமைக்கும் பணியில் அதிகாரிகளும், அலுவலா்களும் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

இந்தப் பணிகளை மத்திய வட்டாரத் துணை ஆணையா் எச்.ஆா். கௌஷிக் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அப்பகுதிகளில் உள்ள அம்மா உணவகத்தையும் அவா் பாா்வையிட்டு ஆய்வு செய்து உணவின் தரத்தை மேம்படுத்த அறிவுறுத்தினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments