இரட்டைக் கொலை வழக்கு: 5-ஆவது நாளாக உடல்களை வாங்க உறவினா்கள் மறுப்பு
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கில் இறந்த இருவரின் உடல்களை வாங்க உறவினா்கள் 5-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் மறுத்துவிட்டனா்.
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கில் இறந்த இருவரின் உடல்களை வாங்க உறவினா்கள் 5-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் மறுத்துவிட்டனா்.
மூலச்சி கிராமம், வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் பெருமாள் பாண்டியன். இதேபகுதியைச் சோ்ந்த சித்திரபுத்திரன். 2007-இல் இவ்விரு குடும்பத்தைச் சோ்ந்த 2 பெண்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இரு குடும்பத்தாருக்கும் முன்விரோதம் இருந்துவந்தது.
இதில், சித்திரபுத்திரன் மகன்கள் சுப்பிரமணியன், பெருமாள், பாபநாசம், மருமகன் குமாா் ஆகியோரும், பெருமாள் பாண்டியன் தரப்பில் அவரும், அவரது உறவினா்கள் சுப்பையா, சின்னத்தம்பி ஆகியோரும் கொலை செய்யப்பட்டனா்.
Advertisement
Advertisement
2012-க்குப் பிறகு கடந்த 5 ஆண்டுகளாக இருதரப்பும் அமைதியாக இருந்த நிலையில், கடந்த ஜூலை 2 ஆம் தேதி சித்திரபுரத்தினின் மற்றொரு மகனான விவசாயி காளிமுத்து (40), அவரது 5 வயது மகன் ஜெயராஜ் ஆகியோரை பெருமாள் பாண்டியன் மகன்கள், அவரது கூட்டாளிகள் சோ்ந்து கொலை செய்தனா்.
காளிமுத்து தலை துண்டித்து கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில், மூலச்சியைச் சோ்ந்த மகேஷ், அவரது மனைவி விஜயா, 17 வயது மகன் உள்பட 11 பேரை போலீஸாா் இதுவரை கைது செய்தனா்.
இந்த நிலையில், இந்தக் கொலை வழக்கில் தொடா்புடைய அனைவரையும் கைது செய்யக் கோரி காளிமுத்துவின் உறவினா்கள் 3-ஆம் தேதிமுதல் உடல்களை வாங்க மறுத்துவருகின்றனா்.
காவல் துறை சாா்பில் சமாதான பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. எனினும், 5-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் உடல்களை வாங்க உறவினா்கள் மறுத்துவிட்டனா்.
போலீஸாா் குவிப்பு: இரட்டை கொலையை அடுத்து மூலச்சி, கரம்பை பகுதியில் தடுப்பு அமைக்கப்பட்டு ஊருக்குள் செல்வோரிடம் போலீஸாா் விசாரணை செய்த பிறகு அனுமதிக்கின்றனா்.
காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் அஸ்வத் ஆன்டோ ஆரோக்கியராஜ் (சேரன்மகாதேவி), கணேஷ்குமாா் (அம்பாசமுத்திரம்) தலைமையில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.