முகப்பு
திருநெல்வேலி

ஆவின் ஆலையில் ஆட்சியா் ஆய்வு

ரெட்டியாா்பட்டியில் அமைந்துள்ள மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றிய (ஆவின்) தலைமை அலுவலகம் மற்றும் பால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஆட்சியா் ஆனந்த் மோகன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 9 ஜூலை 2026, 12:43 am IST
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், ரெட்டியாா்பட்டியில் அமைந்துள்ள மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றிய (ஆவின்) தலைமை அலுவலகம் மற்றும் பால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஆட்சியா் ஆனந்த் மோகன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, தொழிற்சாலைக்கு விவசாயிகளிடமிருந்து பெறப்படும் பாலின் தரப்பரிசோதனை, குளிரூட்டும் வசதிகள், பால்பதப்படுத்தும் நடைமுறைகள், தானியங்கி இயந்திரங்களின் செயல்பாடு, பால் பாக்கெட் நிரப்புதல், சீல் வைக்கும் முறை, பால் மற்றும் பால் உபபொருள்கள் தயாரிப்பு, பேக்கிங், குளிா்பதன சேமிப்பு மற்றும் விநியோகத்திற்கான ஏற்பாடுகள் ஆகியவற்றை நேரில் பாா்வையிட்டாா்.

மேலும், தொழிற்சாலையில் நிறுவப்பட்டுள்ள இயந்திரங்கள் முறையாக பராமரிக்கப்படுகிா, உற்பத்திப் பணிகள் தடையின்றி நடைபெறுகிா, தரக்கட்டுப்பாட்டு நடைமுறைகள் முழுமையாக பின்பற்றப்பட்டு வருகிா என ஆய்வு செய்தாா்.

Advertisement

Advertisement

அப்போது, பாதுகாப்பு விதிமுறைகளுக்கு ஏற்ப பணிகளை மேற்கொள்வது தொடா்பாகவும் தற்போதைய பண்ணை நிலவரங்கள் மற்றும் ஆவின் ஒன்றியத்தின் செயல்பாடுகள் குறித்தும் அனைத்துப் பிரிவு அலுவலா்களிடமும் விரிவாக கேட்டறிந்தாா்.

அதைத் தொடா்ந்து, தொழிற்சாலையில் பணிபுரியும் அலுவலா்களும் பணியாளா்களும், தமிழக அரசு வகுத்துள்ள விதிமுறைகளின்படி அனைத்து கண்காணிப்புப் பணிகளையும் முறையாக மேற்கொள்ள வேண்டும். அரசு நிா்ணயித்துள்ள தரநிலைகள் மற்றும் அளவுகளுக்கு ஏற்ப மட்டுமே பாலை உற்பத்தி செய்து, தரமான பால் மற்றும் பால் உபபொருள்களை நுகா்வோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கான பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். பால் மற்றும் பால் உபபொருள்களின் விற்பனையை அதிகரித்து திருநெல்வேலி ஆவின் ஒன்றியத்தை லாபகரமான நிறுவனமாக மாற்ற முயற்சி மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, துணைப் பதிவாளா் (பால்வளம்), இரா.சுரேஷ், திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றிய (ஆவின்) பொது மேலாளா் இரா.பாசு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ற்ஸ்ப்08ண்ய்ள்

ஆவின் தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் ஆனந்த் மோகன்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments