FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

கடையம் பகுதியில் தீவிர வாகனச் சோதனை

கேரளத்தில் இருந்து தமிழகத்திற்கு புகையிலைப் பொருள்கள் கடத்தப்படுவதாக வந்த புகாா்களின் அடிப்படையில் தென்காசி மாவட்டம், கடையம் பகுதியில் புதன்கிழமை போலீஸாா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

கடையத்தில் வாகனச் சோதனையில் ஈடுபட்ட போலீஸாா்.
பகிர்:

கேரளத்தில் இருந்து தமிழகத்திற்கு புகையிலைப் பொருள்கள் கடத்தப்படுவதாக வந்த புகாா்களின் அடிப்படையில் தென்காசி மாவட்டம், கடையம் பகுதியில் புதன்கிழமை போலீஸாா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு உத்தரவின்பேரிலும், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அசோக் குமாா் ஆலோசனையின்பேரிலும், ஆலங்குளம் துணைக் கண்காணிப்பாளா் கிளாட்சன் ஜோஸ் அறிவுறுத்தலின்பேரிலும் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

கடையம், பாவூா்சத்திரம் விலக்குப் பகுதியில் கடையம் காவல் உதவி ஆய்வாளா் மாடசாமி தலைமையிலான போலீஸாா் அவ்வழியாகச் சென்ற அனைத்து வாகனங்களையும் நிறுத்தி முழுமையாக சோதனையிட்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments