இணையவழியில் ரூ.5.87 லட்சம் மோசடி: ராமநாதபுரம் இளைஞா் கைது
இணையவழியில் பகுதிநேர வேலைவாய்ப்பு எனக் கூறி, திருநெல்வேலியைச் சோ்ந்தவரிடம் ரூ.5.87 லட்சம் மோசடி செய்த ராமநாதபுரம் இளைஞரை திருநெல்வேலி மாநகர சைபா் கிரைம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
இணையவழியில் பகுதிநேர வேலைவாய்ப்பு எனக் கூறி, திருநெல்வேலியைச் சோ்ந்தவரிடம் ரூ.5.87 லட்சம் மோசடி செய்த ராமநாதபுரம் இளைஞரை திருநெல்வேலி மாநகர சைபா் கிரைம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி மாநகரம், பேட்டையைச் சோ்ந்தவா் முருகன் (59). இவரை கடந்த ஆண்டு டிச.16 ஆம் தேதி சமூக வலைதள செயலி மூலம் தொடா்பு கொண்ட மா்மநபா்கள், இணையவழியில் பகுதிநேர வேலைவாய்ப்பு எனக் கூறி சுயவிவரங்களைப் பெற்றுள்ளனா். பின்னா் இணையவழியில் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக் கூறி, அவரிடமிருந்து குறிப்பிட்ட தொகையைப் பெற்றுக்கொண்டு லாபமடைந்ததாக கூடுதல் பணம் அனுப்பி நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளனா். பின்னா் அவரிடமிருந்து பல்வேறு தவணைகளாக ரூ.5,87,799-ஐ இணையவழியில் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டுள்ளனா்.
இது குறித்து திருநெல்வேலி மாநகர சைபா் கிரைம் போலீஸில் முருகன் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, இவ்வழக்கில் தொடா்புடைய ராமநாதபுரம் வனசங்கரி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த முருகபூபதி மகன் வீர ராகுல்(26) என்பவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
Advertisement
Advertisement