டிஜிட்டல் கைது: முதியவரிடம் ரூ. 20 லட்சம் மோசடி!
டிஜிட்டல் கைது செய்ததாகக் கூறி முதியவரிடம் ரூ. 20 லட்சம் மோசடி செய்யப்பட்டது பற்றி..
டிஜிட்டல் கைது செய்ததாகக் கூறி முதியவரிடம் ரூ. 20 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபர் கிரைம் போலீஸார தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை, பீளமேடைச் சேர்ந்த 63 வயது நபர் வார்ப்பட்ட தொழில் நடத்தி வருகிறார். இவருடைய செல்போனுக்கு தொடர்புகொண்ட நபர் தான் மும்பை சி.பி.ஐ அதிகாரி பேசுவதாக கூறினார். மேலும், அவர் உங்கள் ஆதார் கார்டை பயன்படுத்தி சட்ட விரோதமாக பணப் பரிமாற்றம் நடந்துள்ளது. எனவே, உங்கள் வங்கி கணக்கைப் பரிசோதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதற்கு அந்த முதியவர் நான் யாருக்கும்? பணம் அனுப்பவில்லை என்று பதில் அளித்தார்.
உடனே அந்த நபர் நாங்கள் உங்களை டிஜிட்டல் கைது செய்து உள்ளோம். நாங்கள் சொல்லும் வரை வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது. மீறிச் சென்றால், துப்பாக்கி ஏந்திய போலீஸார் உங்களை கண்காணித்து வருகிறார்கள் என்று கூறினார். அதோடு உங்கள் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை நாங்கள் சொல்லும் கணக்குக்கு அனுப்புங்கள், அதை சரி பார்த்த பிறகு திரும்ப அனுப்பி விடுகிறோம். அதுவரை நீங்கள் வெளியே யாரிடமும் சொல்லக் கூடாது. என்று அந்த நபர் மிரட்டி உள்ளார். அதைக் கேட்டு பயந்து அந்த முதியவர், தனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 20 லட்சத்தை அந்த நபர் கூறிய வங்கிக் கணக்குக்கு மாற்றி உள்ளார். அதன் பிறகு அவர் மூன்று நாள்களாக வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்து உள்ளார். ஆனால் அதன் பிறகு அவரை யாரும் தொடர்பு கொள்ளவில்லை.
Advertisement
Advertisement
இதனால் சந்தேகம் அடைந்த அவர் முதியவர் சி.பி.ஐ அதிகாரி என்று பேசிய நபரின் செல்போன் எண்ணுக்கு பலமுறை தொடர்பு கொண்டால் அப்பொழுது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த முதியவர் விசாரித்தபோது டிஜிட்டல் கைது செய்ததாகக் கூறி 20 லட்சத்தை மோசடி செய்தது தெரியவந்தது. இது குறித்து புகாரின் பேரில் கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறும்போது டிஜிட்டல் கைது என்பதே கிடையாது, மர்ம நபர்கள் முதியவர்களைக் குறிவைத்து இதுபோன்ற மோசடியில் ஈடுபடுகிறார்கள். எனவே, பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் டிஜிட்டல் கைது என்று யார் கூறினாலும் நம்ப வேண்டாம் என்றனர்.