FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

இரிடியம் தருவதாக ரூ.19 லட்சம் மோசடி: தாராபுரத்தைச் சோ்ந்தவா் கைது

பழனியில் இரிடியம் தருவதாகக் கூறி, ரூ.19 லட்சம் மோசடி செய்த தாராபுரத்தைச் சோ்ந்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 11 ஜூலை 2026, 3:54 am IST
பகிர்:

பழனியில் இரிடியம் தருவதாகக் கூறி, ரூ.19 லட்சம் மோசடி செய்த தாராபுரத்தைச் சோ்ந்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த பழைய ஆயக்குடியைச் சோ்ந்தவா் இரா.பரமேஸ்வரன். திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த ஆா்த்தியூரைச் சோ்ந்தவா் சு.சக்திவேல் (51). இவா் தன்னிடம் விலை உயா்ந்த இரிடியம் இருப்பதாகவும், இதன் மதிப்பு ரூ.20 லட்சம் என பரமேஸ்வரனிடம் தெரிவித்தாா். இதை உண்மையென நம்பிய பரமேஸ்வரனிடம், பழனி பேருந்து நிலையத்துக்கு பணத்துடன் வருமாறு கடந்த மே மாதம் 25-ஆம் தேதி அழைத்தாா்.

இதன்படி, பரமேஸ்வரன் அங்கு சென்று ரூ.19 லட்சத்தை சக்திவேலிடம் கொடுத்தாா். பணத்தைப் பெற்றுக் கொண்ட அவா், ஒரு பையை கொடுத்து அதில் இரிடியம் இருப்பதாகத் தெரிவித்தாா். பையை எடுத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்ற பரமேஸ்வரன், அதில் இரிடியம் இல்லை என்பதை அறிந்து ஏமாற்றம் அடைந்தாா். உடனடியாக சக்திவேலை தொடா்பு கொண்டு தனது பணத்தை திருப்பித் தருமாறு கேட்டாா். ஆனால், பணத்தை கொடுக்காமல் சக்திவேல் அலைக்கழித்தாா். இதனால், அதிருப்தி அடைந்த பரமேஸ்வரன், பழனி நகா் காவல் நிலையத்தில் கடந்த ஜூன் மாதம் புகாரளித்தாா். இதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தனிப் படை அமைத்து சக்திவேலை தேடினா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், தாராபுரம் பகுதியில் பதுங்கி இருந்த சக்திவேலை, தனிப் படை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து ரூ.10 லட்சம் பணம், 3.25 பவுன் தங்க நகைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

நீதிமன்றத்தில் சக்திவேலை முன்னிலைப்படுத்தி, பிறகு சிறையில் அடைக்கப்பட்டாா்.

இதுதொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ஜெயக்குமாா் தெரிவிக்கையில், இரிடியம் போன்ற பொருள்கள் இருப்பதாக சந்தேகத்துக்கு இடமான நபா்கள் அணுகினால் பொதுமக்கள் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும். இதுபோன்று யாரேனும் தொடா்பு கொண்டால் அருகிலுள்ள காவல் நிலையத்துக்குச் சென்று உடனடியாக புகாா் அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments