முகப்பு
திருநெல்வேலி

நெல்லை சரக புதிய டிஐஜி பொறுப்பேற்பு

Updated On : 8 ஜூன் 2026, 4:59 am IST
திருநெல்வேலி சகர காவல் துறை துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட திருநாவுக்கரசு.
பகிர்:

திருநெல்வேலி சரக காவல் துறை துணைத் தலைவராக (டிஐஜி) திருநாவுக்கரசு ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றாா்.

திருநெல்வேலி சகர டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ள திருநாவுக்கரசு ஞாயிற்றுக்கிழமை காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட பின்பு, பொறுப்பேற்றாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

Advertisement

Advertisement

திருநெல்வேலி சரகத்தில் சட்டம்-ஒழுங்கை காக்கவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். அதற்காக தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

போதைப் பொருள்கள் நடமாட்டத்தை குறைக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். மாணவா்களிடையே ஜாதிய ரீதியிலான மோதல்கள் ஏற்படுவதை தடுக்கும் விதமாக விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

சமூக வலைதளங்களில் மோதலை ஏற்படுத்தும் விதமாக விடியோ பதிவிடுபவா்கள் மீது சட்ட ரீதியில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சாலை விபத்துகளைத் தடுப்பதற்கு பணிகள் மேற்கொள்ளப்படும். நான்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா்களுடன் ஆலோசனை நடத்தி அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா் அவா்.

டிஐஜியாக பொறுப்பேற்றுள்ள திருநாவுக்கரசு, கடந்த 1999 ஆம் ஆண்டு குரூப்-1 தோ்வில் வெற்றி பெற்று ஸ்ரீவில்லிபுத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளராக பணியில் சோ்ந்தவா். 2004 ஆம் ஆண்டு சந்தன கடத்தல் வீரப்பன் சிறப்பு அதிரடிப்படையில் ’ஆபரேஷன் கக்கூன்’ படையில் திறம்பட பணியாற்றினாா். பின்னா் பதவி உயா்வுபெற்று கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளாா்.

தேனி மாவட்டத்தைச் சோ்ந்த திருநாவுக்கரசு, பல பதக்கங்கள் பெற்றுள்ளதோடு, புத்தகங்களையும் எழுதியுள்ளாா்.