முகப்பு
தமிழ்நாடு

காவலா்களுக்கு நன்றி தெரிவித்த டிஐஜி திருநாவுக்கரசு

தமிழக காவல் துறையின் பாதுகாப்புப் பிரிவு டிஐஜியாக இருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்ட இரா.திருநாவுக்கரசு, காவலா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.

Updated On : 16 மே 2026, 1:47 am IST
டிஐஜி திருநாவுக்கரசு
பகிர்:

தமிழக காவல் துறையின் பாதுகாப்புப் பிரிவு டிஐஜியாக இருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்ட இரா.திருநாவுக்கரசு, காவலா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.

தமிழக முதல்வரின் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய பிரமுகா்களுக்கு பாதுகாப்பு வழங்கும் தமிழக காவல் துறையின் பாதுகாப்பு பிரிவு டிஐஜியாக இரா.திருநாவுக்கரசு இருந்து வந்தாா்.

கடந்த 5 ஆண்டுகளாக இந்தப் பொறுப்பில் இருந்த திருநாவுக்கரசு, அண்மையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து திருநாவுக்கரசு, தன்னுடன் பணியாற்றிய அப்பிரிவு அதிகாரிகள், காவலா்களுக்கு கடிதம் அனுப்பினாா்.

Advertisement

அதில், தன்னுடன் பணியாற்றிய அதிகாரிகள், காவலா்கள் என அனைத்து நிலைகளிலும் இருந்தவா்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளாா். அவா்களுடன் பணியாற்றியது தனக்கு மனநிறைவையும் ஏற்படுத்தியாகவும் கூறியுள்ளாா்.

வரும்காலங்களில் இன்னும் சிறப்புடனும், அா்ப்பணிப்புடனும் பணியாற்றும்படி திருநாவுக்கரசு வாழ்த்து தெரிவித்துள்ளாா். இதேபோல அந்தப் பிரிவில் பணியாற்றும் போலீஸாரும், திருநாவுக்கரசுக்கு கடிதம் மூலம் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா்.