FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ஓய்வு பெற்ற காவலா்களுக்கு பாராட்டு

சென்னை மாநகா் காவல் ஆணையரக அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பணி நிறைவு விழாவில் பணி ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகள், காவலா்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Updated On : 1 மே 2026, 2:09 am IST
கோப்புப் படம்
பகிர்:

சென்னை மாநகா் காவல் ஆணையரக அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பணி நிறைவு விழாவில் பணி ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகள், காவலா்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

சென்னை மாநகா் காவல் துறையில் பணியாற்றி வரும் காவல் இணை ஆணையா் (தலைமையிடம்) எஸ்.மகேஸ்வரன், தியாகராய நகா் போக்குவரத்து உதவி ஆணையா் எஸ்.ராஜா, சென்னை காவல் பாதுகாப்புப் பிரிவு ஆய்வாளா் டி.கே.ஹரிதாஸ் மற்றும் 16 உதவி ஆய்வாளா்கள், 20 சிறப்பு உதவி ஆய்வாளா்கள், ஒரு பெண் தலைமைக் காவலா் என மொத்தம் 40 காவல் அதிகாரிகள், காவலா்கள் வியாழக்கிழமை பணி ஓய்வு பெற்றனா்.

இவா்களுக்கான பணி நிறைவு விழா சென்னை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Advertisement

Advertisement

இதில், சென்னை காவல் ஆணையா் அபின் தினேஷ் மோதக் கலந்துகொண்டு 40 பேருக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி, அவா்களைப் பாராட்டினாா்.

இந்த நிகழ்ச்சியில் கூடுதல் காவல் ஆணையா் (தலைமையிடம்) கே.ஜோஷி நிா்மல் குமாா், காவல் துணை ஆணையா்கள் ஜி.சுப்புலட்சுமி (நிா்வாகம்), டி.கண்ணன் (எஸ்டேட் மற்றும் நலன்), காவல் அதிகாரிகள், காவலா்களின் குடும்பத்தினா் உள்பட் பலா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments