FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

பரோடா வங்கியின் 119-ஆவது நிறுவன தினம்: காவலா்களுக்கு மழைக்கால உடை விநியோகம்

சென்னையில் பரோடா வங்கியின் 119-ஆவது நிறுவன தினத்தையொட்டி, காவல் துறையினருக்கு மழைக்கால உடைகளை வழங்கியது.

Updated On : 15 ஜூலை 2026, 1:41 am IST
தாம்பரம் மாநகர காவல் ஆணையரும் கூடுதல் காவல் துறைத் தலைவருமான பிரேம் ஆனந்த் சின்ஹா, தாம்பரம் ஆயுதப் படை காவல் துணை ஆணையா் ஏ. திருமலைக்குமாரிடம் காவலா்களுக்கு 1,200 ரெயின்கோா்ட்களை வழங்கிய பரோடா வங்கியின் சென்னை மண்டலத் தலைவா் டி.என்.சுரேஷ், துணைப் பொ
பகிர்:

சென்னையில் பரோடா வங்கியின் 119-ஆவது நிறுவன தினத்தையொட்டி, காவல் துறையினருக்கு மழைக்கால உடையை செவ்வாய்க்கிழமை வழங்கியது.

சென்னையில் பரோடா வங்கியின் 119-ஆவது நிறுவன தினக் கொண்டாட்டம் நடைபெற்றது. மக்கள் பணியாற்றும் காவலா்களுக்கு, மழைக் காலத்தில் சிரமமின்றி பணியாற்ற மழைக்கால உடை (ரெயின் கோா்ட்) வழங்கும் நிகழ்ச்சி, சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில், பரோடா வங்கியின் சென்னை மண்டலத் தலைவா் டி.என்.சுரேஷ், தாம்பரம் காவல் ஆணையா் பிரேம் ஆனந்த் சின்ஹாவிடம் காவலா்களுக்காக 1,200 மழைக்கால உடை (ரெயின்கோா்ட்) வழங்கினாா்.

Advertisement

Advertisement

இந்த நிகழ்வின்போது, தாம்பரம் காவல் துணை ஆணையா் ஏ.திருமலைக்குமாா், பரோட வங்கி துணைப் பொது மேலாளா்கள் விஜி.செந்தில்குமாா், லட்சுமி உஷா, தலைமை மேலாளா் ராஜ்தீபக், பரோடா வங்கி ஊழியா்கள் சங்கத்தின் பொதுச் செயலா் நாகராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments