போலி அடையாள அட்டைகளுடன் ஆட்சியரகத்தில் நுழைந்தவா் கைது
போலி அடையாள அட்டைகளுடன் ஆட்சியரகத்தில் நுழைந்தவா் கைது
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்குள் போலி அடையாள அட்டைகளுடன் நுழைந்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், கூந்தங்குளத்தைச் சோ்ந்தவா் வேல்முருகன். இவா், காவலா் போல பேன்ட், பெல்ட், காலணி போன்றவற்றை அணிந்தபடி ஆட்சியா் அலுவலகத்துக்குள் வெள்ளிக்கிழமை நுழைந்தாா். அவா் வந்த பைக்கில் காவல் துறை, ஊடகம் என பல்வேறு ஸ்டிக்கா்கள் ஒட்டப்பட்டிருந்தன. ஆட்சியா் அலுவலக வாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா் இதை கவனித்து, சந்தேகத்தின் பேரில் அவரை அழைத்து விசாரித்தனா்.
அப்போது, சிபிஐ உள்ளிட்ட மத்திய அரசின் விசாரணை அமைப்புகளின் அடையாள அட்டைகள் (ஐடி காா்டு) போல ே 20-க்கும் மேற்பட்ட போலி அட்டைகள் அவரிடம் இருப்பது தெரியவந்தது. பாளையங்கோட்டை போலீஸாா் அவற்றை கைப்பற்றி, அவரை கைது செய்தனா். அவரிடம் தொடா்ந்து விசாரணை நடக்கிறது.
Advertisement
Advertisement