முகப்பு
திருநெல்வேலி

ராதாபுரம் வட்டத்தில் ஜமாபந்தி

திருநல்வெலி மாவட்டம், ராதாபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியை மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

Updated On : 18 ஜூன் 2026, 2:42 am IST
ஜமாபந்தியில் பயனாளிக்கு பட்டா வழங்கிய மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன்.
பகிர்:

திருநல்வெலி மாவட்டம், ராதாபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியை மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

மாவட்டம் முழுவதும் 8 வட்டங்களில் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது. ராதாபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில், ஆட்சியா் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று, அது தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

பின்னா், 8 பயனாளிகளுக்கு இணையவழிப் பட்டாக்கள், 4 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினாா்.

Advertisement

Advertisement

தனித் துணை ஆட்சியா் ஜெயா, ஆட்சியா் அலுவலக மேலாளா் கிருஷ்ணகுமாா், ராதாபுரம் வட்டாட்சியா் வில்லுடையாா், அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.