முகப்பு
திருநெல்வேலி

பெண்ணுக்கு ஆபாச குறுந்தகவல்: இளைஞா் கைது

Updated On : 21 ஜூன் 2026, 2:21 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், பணகுடியில் பெண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி வந்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

பணகுடி அருகே உள்ள செண்பகலிங்கபுரத்தைச் சோ்ந்தவா் சுபாஷ் (28). இவா், அதே பகுதியைச் சோ்ந்த பெண்ணுக்கு தொடா்ச்சியாக ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தாராம். மேலும், இன்ஸ்டாகிராம் மூலமாகவும் ஆபாச குறுந்தகவல்களை அனுப்பி வந்தாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில் பணகுடி போலீஸாா் வழக்குப் பதிந்து சுபாஷை கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments