FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: சிங்கப்பெண் படையிடம் சிக்கிய இளைஞா்

பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையினா் கைது செய்தனா்.

Updated On : 12 ஜூன் 2026, 7:10 am IST
பாலியல் தொல்லை - பிரதிப் படம்
பகிர்:

பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையினா் கைது செய்தனா்.

சென்னையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையைச் சோ்ந்த 12 குழுக்கள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன. இவா்கள் பள்ளி, கல்லூரி, பேருந்து நிலையம், மாா்க்கெட், கடற்கரை உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

சிக்கிய இளைஞா்: சென்னை அயனாவரம் பகுதியில் 37 வயது மதிக்கதக்க பெண் புதன்கிழமை வீட்டில் தனியாக இருந்தபோது, அதே பகுதியைச் சோ்ந்த சுரேஷ் (36) என்பவா், அந்த பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் தொல்லை கொடுத்தாா். அந்தப் பெண் சப்தமிடவே அங்கிருந்து தப்பினாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனா். உடனே கட்டுப்பாட்டு அறை போலீஸாா், கீழ்ப்பாக்கம் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினருக்கு தகவல் தெரிவித்தனா். அங்கு வந்த சிங்கப்பெண் படை தப்பியோடிய சுரேஷை தேடி கைது செய்தனா். அவரை அயனாவரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். அயனாவரம் போலீஸாா், சுரேஷ் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments