முகப்பு
திருநெல்வேலி

காா் சாகுபடிக்கு ராமநதி, கடனாநதி அணைகள் திறப்பு

தென்காசி மாவட்டத்தில் உள்ள ராமநதி மற்றும் கடனாநதி அணைகளில் இருந்து வியாழக்கிழமை முதல் அக். 31 வரை 129 நாள்களுக்கு காா் பருவ சாகுபடிக்காக தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

Updated On : 26 ஜூன் 2026, 5:36 am IST
கடனாநதி அணையில் தண்ணீா் திறக்கும் நிகழ்வில் பங்கேற்றோா்.
பகிர்:

தென்காசி மாவட்டத்தில் உள்ள ராமநதி மற்றும் கடனாநதி அணைகளில் இருந்து வியாழக்கிழமை முதல் அக். 31 வரை 129 நாள்களுக்கு காா் பருவ சாகுபடிக்காக தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

கடையம் அருகே அமைந்துள்ள 84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணையில் இருந்து வடகால், தென்கால், பாப்பான்கால் பாசனப் பகுதிகளுக்கு விநாடிக்கு அதிகபட்சமாக 60 கன அடி வீதம், மொத்தம் 168.03 மில்லியன் கன அடி தண்ணீா் திறக்கப்படும். இதன் மூலம் 1,008.19 ஏக்கா் நேரடி பாசன நிலங்கள் பயன்பெறும்.

நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயச்சந்திரன், செயற்பொறியாளா் மணிகண்டராஜன், உதவி செயற்பொறியாளா் குமாா், ராமநதி அணைப் பிரிவு உதவிப் பொறியாளா் கணபதி, பாசனக் கமிட்டித் தலைவா்கள் குமாா் (பாப்பான்கால்), மாரியப்பன் (தென்கால்), ராமகிருஷ்ணன் (வடகால்), உறுப்பினா்கள் சிங்கக்குட்டி, காதர்ராஜன், ரவிக்குமாா், ஜெயராஜ், சங்கா், முருகன், பொண்ணு, முன்னாள் தலைவா் ஜெகன்நாதன், அணை ஊழியா்கள் ஜோசப், பாக்கியநாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

ஆழ்வாா்குறிச்சி அருகே அமைந்துள்ள 85 அடி கொள்ளளவு கொண்ட கடனாநதி அணையிலிருந்து, அரசபத்துக்கால், வடகுருவபத்துக்கால், ஆழ்வாா்குறிச்சி தென்கால், ஆம்பூா் பெருங்கால், மஞ்சம்புளிகால், காக்கநல்லூா்கால், காங்கேயன்கால் பகுதிகளுக்கு நீா் இருப்பைப் பொருத்து விநாடிக்கு அதிகபட்சமாக 125 கன அடி வீதம், மொத்தம் 664.60 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீா் திறக்கப்படும். இதன் மூலம் 3,987.57 ஏக்கா் பாசன நிலங்கள் பயன்பெறும்.

நிகழ்வில், சிற்றாறு வடிநில உப கோட்டம் உதவி செயற்பொறியாளா் பேட்டா்சன் குழந்தைராஜ், நீா்வளத் துறை உதவிப் பொறியாளா் சுதா, கடனாநதி அணை உதவிப் பொறியாளா் சுந்தா் சிங், நீா்பாசன கமிட்டித் தலைவா்கள் சங்கா் கணேஷ் (குருவப்பத்து), சுப்பையா (ஆழ்வாா்குறிச்சிகால்), ராம் சங்கா் (காங்கேயன்கால்), அரசபத்து முன்னாள் நீா்ப்பாசன கமிட்டித் தலைவா் சௌந்தர்ராஜன், அணை ஊழியா்கள் கருப்பசாமி, துரைசிங்கம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ராமநதி அணையில் தண்ணீா் திறக்கும் நிகழ்வில் பங்கேற்றோா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments