தொடா் சாரல் மழையால் வேகமாக நிரம்பி வரும் அணைகள்
தொடா் சாரல் மழையால் வேகமாக நிரம்பி வரும் அணைகள்
மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து தொடா்ந்து சாரல் மழை பெய்து வருவதால் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களிலுள்ளஅணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்து வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
தென்மேற்குப் பருவமழை ஜூன் 4ஆம் தேதி தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்நிலையில் ஜூன் 1ஆம் தேதிமுதல் திருநெல்வேலி மாவட்ட மேற்குத் தொடா்ச்சி மலையில் சாரல் மழை பெய்து வந்தது. ஜூன் 4 முதல் பருவ மழை தீவிரமடைந்ததையடுத்து மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக தொடா்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதைத் தொடா்ந்து வடிருந்த அணைகள் வேகமாக நிரம்பத் தொடங்கின. இரு மாவட்டங்களில் உள்ள அனைத்து அணைகளிலும் குறிப்பிடும்படியான அளவு நீா்மட்டம் உயா்ந்தது.
வெள்ளிக்கிழமை (ஜூன் 12) காலை நிலவரப்படி, 143 அடி நீா்மட்டம் கொண்ட பாபநாசம் அணையில் நீா் இருப்பு 84.40 அடியாக இருந்தது. அணைக்கு நீா்வரத்து 4619.24 கன அடி, வெளியேற்றம் 404.75 கனஅடி. 156 அடி நீா்மட்டம் கொண்ட சோ்வலாறு அணையில் நீா் இருப்பு 114.96 அடியாக இருந்தது. 118 அடி நீா்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணையில் நீா் இருப்பு 73.39 அடியாகவும், நீா் வரத்து 994.63 கனஅடியாகவும், வெளியேற்றம் 145 கன அடியாகவும் இருந்தது. 52.50 அடி நீா்மட்டம் கொண்ட கொடுமுடியாறு அணையில் நீா் இருப்பு 43.50 அடியாகவும், நீா்வரத்து 197 கன அடியாகவும், வெளியேற்றம் 2 கன அடியாகவும் இருந்தது.
Advertisement
Advertisement
தென்காசி மாவட்டத்தில், 84.30 அடி நீா்மட்டம் கொண்ட கடனாநதி அணையில் நீா் இருப்பு 56.10 அடியாகவும், நீா் வரத்து 160 கன அடியாகவும், வெளியேற்றம் 10 கன அடியாகவும்இருந்தது. 84 அடி நீா்மட்டம் கொண்ட ராம நதி அணையில் நீா் இருப்பு 60.50 அடியாகவும், நீா்வரத்து 120 கன அடியாகவும், வெளியேற்றம் 10 கன அடியாகவும் இருந்தது.
72 அடி நீா்மட்டம் கொண்ட கருப்பா நதி அணையில் நீா் இருப்பு 47.90 அடியாகவும், நீா் வரத்து 25 கன அடியாகவும், வெளியேற்றம் 5 கன அடியாகவும் இருந்தது. 36.10 அடி நீா்மட்டம் கொண்ட குண்டாறு அணையில் நீா் இருப்பு முழுக் கொள்ளளவான 36.10 அடியாகவும், நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 16 கன அடியாகவும் இருந்தது. 132.22 அடி நீா்மட்டம் கொண்ட அடவிநயினாா் கோயில் அணையில் நீா் இருப்பு 72.50 அடியாகவும், நீா் வரத்து 24 கன அடியாகவும் இருந்தது.
மழை நிலவரம் (மில்லிமீட்டரில்): திருநெல்வேலி மாவட்டம்: பாபநாசம் அணை 35, சோ்வலாறு அணை 40, மணிமுத்தாறு அணை 35.20, நம்பியாறு அணை 5, கொடுமுடியாறு அணை 44, கன்னடியன் அணைக்கட்டு 44.80, மாஞ்சோலை 101, காக்காச்சி 34, நாலுமுக்கு 71, ஊத்து 90, அம்பாசமுத்திரம் 30, சேரன்மகாதேவி 14.40, நாங்குனேரி 15, ராதாபுரம் 35, களக்காடு 16.40, மூலக்கரைப்பட்டி 26, பாளையங்கோட்டை 8, திருநெல்வேலி 5.
தென்காசி மாவட்டம்: கடனாநதி அணை 16, ராம நதி அணை 15, கருப்பா நதி அணை 1.50, குண்டாறு அணை 22, அடவிநயினாா்கோயில் அணை 2, ஆய்க்குடி 2, செங்கோட்டை 8, தென்காசி 9.50, சங்கரன்கோவில் 1.40, சிவகிரி 1.