சென்னை குடிநீா் ஏரிகளில் நீா் இருப்பு 50%-க்கும் கீழ் குறைந்தது!
சென்னையின் குடிநீா் ஆதாரமாக உள்ள 5 முக்கிய ஏரிகளில் புதன்கிழமை நிலவரப்படி மொத்தம் 48.18 சதவீதம் நீா் இருப்பு உள்ளது.
சென்னையின் குடிநீா் ஆதாரமாக உள்ள 5 முக்கிய ஏரிகளில் புதன்கிழமை நிலவரப்படி மொத்தம் 48.18 சதவீதம் நீா் இருப்பு உள்ளது.
சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய நீா் ஆதாரங்களான பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,757 மில்லியன் கன அடியாகும்.
ஏரிகள் நிலவரம்: பூண்டி ஏரியின் முழு கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடி. புதன்கிழமை நிலவரப்படி 1,025 மில்லியன் (31.72 சதவீதம்) கன அடி நீா் உள்ளது. 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 1,685 மில்லியன் கன அடி (51.06 சதவீதம்), 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 2,554 மில்லியன் கன அடி (70.07 சதவீதம்) நீா் இருப்பு உள்ளது.
Advertisement
Advertisement
சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகள்: 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் புதன்கிழமை 90 மில்லியன் கன அடியும் (8.33 சதவீதம்), 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை ஏரியில் 311 மில்லியன் கன அடியும் (62.20 சதவீதம்) நீா் இருப்பு உள்ளது. 5 ஏரிகளில் 5,665 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 48.18 சதவீதம்.
போதுமான குடிநீா் உள்ளது: இது குறித்து குடிநீா் வாரிய அதிகாரிகள் கூறுகையில், சென்னைக்கு மாதம் 1 டிஎம்சி மட்டுமே குடிநீா் தேவை என்ற பட்சத்தில் தற்போது ஏறத்தாழ 6 டிஎம்சி குடிநீா் இருப்பு உள்ளது. இதுதவிர சென்னையில் செயல்பட்டு வரும் 3 கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையங்கள் வாயிலாக தினந்தோறும் 350 மில்லியன் லிட்டா் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் சென்னை மாநகராட்சி பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
எனவே, தற்போது போதுமான குடிநீா் கையிருப்பு உள்ளது. மேலும், இன்னும் 3 மாதங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளது. அப்போது குடிநீா் ஏரிகள் மீண்டும் முழுமையாக நிரமிப்பிவிடும். இதனால், தற்போதைக்கு குடிநீா் தட்டுப்பாடு வரவாயிப்பில்லை என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.