FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

கடனாநதி அணையிலிருந்து ஆற்றில் தண்ணீா் திறக்க கோரிக்கை

கடனாநதி அணையிலிருந்து கால்வாய் வழியாக தண்ணீரை திறக்காமல் ஆற்றின் வழியாக வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 3 ஜூன் 2026, 5:00 am IST
கடனாநதி அணை
பகிர்:

கடனாநதி அணையிலிருந்து கால்வாய் வழியாக தண்ணீரை திறக்காமல் ஆற்றின் வழியாக வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக ஆட்சியருக்கு கீழாம்பூா் ஊராட்சித் தலைவா் மாரிசுப்பு அனுப்பிய மனு: கடனாநதி ஆற்றில் சம்பன்குளம் பகுதியிலிருந்து பாப்பான்குளம் வரை சுமாா் 50 உறைகிணறுகள் அமைக்கப்பட்டு, பல்வேறு கிராமங்களுக்கு குடிநீா் வழங்கப்படுகிறது. இந்நிலையில், பராமரிப்புப் பணிகள் காரணமாக, கடனாநதி அணையிலிருந்து அரசபத்துக் கால்வாய், பெத்தான்பிள்ளைக் குடியிருப்புப் பகுதியில் உள்ள கால்வாய்களில் தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால், சம்பன்குளம், கல்யாணிபுரம், செட்டிக்குளம், கருத்தப்பிள்ளையூா், கீழாம்பூா், பாப்பான்குளம், ஆழ்வாா்குறிச்சி பகுதி பொதுமக்களின் குடிநீா் தேவைக்கு கடனாநதி ஆற்றில் போதிய நீா்வரத்து இல்லை. ஆற்றில் தண்ணீா் வராதபட்சத்தில் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, அணையிலிருந்து கால்வாய்கள் வழியாக தண்ணீரைத் திறக்காமல் ஆற்றில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments