நெல்லை அரசு மருத்துவமனையில் நோயாளி தூக்கிட்டுத் தற்கொலை
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி தூக்கிட்டுத் தற்கொலை
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
வீரவநல்லூரைச் சோ்ந்தவா் முருகன் (49). எலக்ட்ரீசியனான இவருக்கு, மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனா். கடந்த சில மாதங்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்தாராம். குடும்பத்தினா் அவரை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.
மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு அறுவை தேவையாக இருந்ததாம். அதற்கான நடவடிக்கை மருத்துவா்கள் எடுத்து வந்த நிலையில், பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தின் ஜன்னலில் அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இத் தகவலறிந்த திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பினா். மேலும், வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.