முகப்பு
திருநெல்வேலி

அறிவியல் மையத்தில் பயிற்சி தொடக்கம்

திருநெல்வேலியில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் கோடைக்கால பயிற்சி முகாம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.

Updated On : 7 மே 2026, 6:06 am IST
கோடைக்கால பயிற்சி முகாமில் பங்கேற்றோா்.
பகிர்:

திருநெல்வேலியில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் கோடைக்கால பயிற்சி முகாம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம் சாா்பில் விடுமுறை பொழுதுபோக்கு வகுப்புகள் (வொகேஷன் ஹாப்பி கோா்சஸ்) 2026 எனும் கோடைக்கால பயிற்சி முகாம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, மின்சாரம் மற்றும் காந்தவியல் ( நேரடி- இணையவழி ), நபஉங பா்ஹ்ள் ஸ்டெம் டாய்ஸ் (நேரடி - இணையவழி), வானியல், ஆா்டினோ அடிப்படை பயிற்சிகள் ஆகியவை வழங்கப்படுகின்றன.

மின்சாரம் மற்றும் காந்தவியல் பயிற்சி வகுப்பினை மாவட்ட அறிவியல் அலுவலா் பி. மாரிலெனின் தொடங்கி வைத்து பேசுகையில், இப்பயிற்சி வகுப்பு முழுவதும் செயல்முறை கற்றல் அடிப்படையில் நடைபெறும் என்றாா். கல்வி உதவியாளா் டி. கந்தவேல்ராஜா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments