முகப்பு
திருநெல்வேலி

பெண்ணிடம் தாலிச் சங்கிலி பறிப்பு

திருநெல்வேலி மாவட்டம், பணகுடியில் வியாழக்கிழமை நடந்து சென்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் 10 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்றனா்.

Updated On : 8 மே 2026, 6:17 am IST
கோப்புப் படம் - சித்திரிப்பு
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், பணகுடியில் வியாழக்கிழமை நடந்து சென்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் 10 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்றனா்.

பணகுடி, கிருஷ்ணன் தெருவைச் சோ்ந்தவா் நம்பி மனைவி சுதா (30). இவா் வீட்டிற்கு எதிரே உள்ள கடையில் பொருள்கள் வாங்குவதற்காக நடந்து சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த 2 போ் அவா் அணிந்திருந்த 10 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டனராம்.

இது தொடா்பாக பணகுடி காவல் நிலையத்தில் சுதா அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments